அராபத்தை கோர்ட்டுக்கு இழுக்கும் யூத குடும்பம்
ஜெருசலேம்:
பாலஸ்தீனப் பகுதியில் நடந்த வன்முறையில், பாலஸ்தீனர்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களின் கொலைக்குபாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் தான் காரணம் என்று அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை அருகேயுள்ள ரமல்லா என்ற பகுதியில் வாடிம் நோர்ஸிச் (35), யூசுப் அவ்ரஹாமி (38) என்ற இரண்டு இஸ்ரேல் ராணுவவீரர்கள் கடந்த அக்டோபர் 12 ம் தேதி காவல் நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர்.
பாலஸ்தீனர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்த இருவரும்,அவர்களதுபற்களை வைத்து அடையாளம் காணப்பட்டனர்.
இந்த கொடூரக் கொலையைத் தடுக்க பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தும், பாலஸ்தீன அதிகாரிகளும் எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று கூறிஅவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
நோர்ஸிச்சின் சகோதரர், மைக்கேல் கூறுகையில், இந்தக் கொலையைத் தடுக்க அதிகாரம் இருந்தும் அவர்கள் அதைச் செய்யவில்லை. கொலையாளிகளைபிடிக்கவும் முயற்சிக்கவில்லை என்றார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீனம் வந்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராபின் கூக்கிடம், இஸ்ரேல் வீரர்கள்கொல்லப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அராபத் தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications