சென்னையில் சோ-ஜெ.ரகசிய சந்திப்பு
சென்னை:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சோவை, சந்தித்துப் பேசினார்.
இவர்கள் இருவரும் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு அ.தி.மு.கவை தயார்படுத்தும் முக்கியப் பணிகளில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்.
பல தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதிலும் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டார் எனவும்கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை பார்க்க சென்னை வந்தார்.
காளிமுத்துவை பார்த்த பின் அவர் ஹைதராபாத் சென்று விடுவார் என கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சென்னையிலேயே தங்கியிருக்கிறார்.
21-ம் தேதி நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்பு 23-ம் தேதி நடக்கவிருக்கும் இஃப்தார் விருந்துகொடுக்கவிருக்கிறார். 24-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நினைவு அமைதி ஊர்வலத்திலும் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே ஜெயலலிதா துக்ளக் ஆசிரியர் சோவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சோ.அவரை ஜெயலலிதாவே நேரில் சென்று பார்த்து, பேசியது வியப்பளிப்பதாக அமைந்துள்ளது.
ஜெயலலிதா சுமார் ஒரு மணிநேரம் சோவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா அவரிடம் சட்ட ஆலோசனை கேட்டிருக்கலாம் எனவும்,அரசியல் குறித்து ஆலோசனை செய்திருக்ககலாம் எனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ராஜ்யசபா உறுப்பினராக பாரதீய ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோ. பாரதீய ஜனதாவை எதிர்த்து வரும் ஜெயலலிதா சோவை சந்தித்ததுபாரிதீய ஜனதா கட்சியிலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications