அதிகரிக்கும் பெண் பட்டதாரிகள்
கோபி:
இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள், ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர் என கோபியில்கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
கோபியில் புதிய நகராட்சிப் பள்ளிக் கட்டடத்தை கல்வி அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்து பேசியதாவது:
தமிழக அரசு தான் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதியை செலவிட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 950 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் 90சதவீதம் ஆசிரியர்களின் சம்பளமாகும். இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் பணியாற்று கின்றனர்.
இவர்களுக்கு தி.மு.க அரசு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு தேவையான அனைத்து வசதிகளையும் அளித்துள்ளது.கிராம முன்னேற்றங்களிலும், அடிப்படை வசதிகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது ஆண்களை விட பெண்கள் தான் கல்வியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கல்வியில் பெண்களின் பங்கு உயர்ந்துள்ளது. இன்னும் 5ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு நிகராக அனைத்து அதிகாரங்களும் தற்போது பெண்களுக்கு சம அளவில் வழங்கப்பட்டு விட்டது. இன்டெர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் கல்விஉயர்ந்து வருகிறது. இது ஒரு புது யுகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
டி.வி யில் கற்கப்படும் கல்வி, இன்டெர்நெட் வழியாக இனி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications