தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
டெல்லி:
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்தியா முழுவதும் தபால் ஊழியர்கள் 5 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டாத்தைத் தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
ஊதிய உயர்வு உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இந்தியாவிலிருந்து 6 லட்சம் தபால்ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலிருந்து 49 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் மத்திய அரசு தங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று தபால் ஊழியர்கள் சம்மேளனம் தொடர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டது.
ராம்விலாஸ் பாஸ்வானுடன் பேச்சுவார்த்தை:
இந்தநிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுடன், தபால் ஊழியர்கள் சங்கங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 3 சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தைநடந்தது.
இறுதியாக ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து தேசிய தபால் கூட்டமைப்பு, பாரதிய தபால் யூனியன் ஆகிய சங்கங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றன.தபால் ஊழியர்கள் கூட்டமைப்பு மட்டும் போராட்டத்தைக் கைவிட மறுத்து விட்டது.
உடன்பாட்டின்படி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகள் குறித்து மந்திரி சபை குழுவின் ஆய்வுக்கு சிபாரிசு செய்யப்படும். ரயில்வே மெயில்ஊழியர்கள் தொடர்பான கோரிக்கைகள் தபால் வாரியத்துடன் தனியாக விவாதிக்கப்படும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 13 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைக்குத்திரும்புகிறார்கள்.
மேலும் தபால் ஊழியர்கள் கூட்டமைப்பு 18 ம் தேதி கூடி, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாவேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications