வேலூர் வருகிறார் இலங்கைத் தூதர்
வேலூர்:
வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி முருகனை சந்தித்துப் பேசுவதற்காக, இலங்கைத் தூதர் விரைவில்வேலூர் வருகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை அடைந்த முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூக்குத் தண்டனை பெற்று பின்னர் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கொலைக் குற்றவாளி நளினி பெண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். நளினியும், முருகனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
முருகனைச் சந்திக்கிறார் தூதர்:
இதற்கிடையே மத்திய சிறையில் உள்ள முருகனை சந்திக்க சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் தமிழக அரசிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளார்.
இதன்படி, முருகனை சந்தித்துப் பேச இலங்கை தூதருக்கு அரசு அனுமதி வழங்கி வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். நளினி சென்னையில் உள்ள தனி சிறையில்இருந்த போது அவருக்கு அரித்தரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள முருகனின் உறவினர்களிடம் வளர்கிறது. அந்தக் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு வந்தகோரிக்கையின் அடிப்படையில் இலங்கைத் தூதர், வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகனை சந்திக்க அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் முருகனை சந்தித்துப் பேசுவார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications