தி.மு.க.வை குறி வைக்கிறது வி.எச்.பி.
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க இந்து இயக்கங்களுடன் இணைந்துபிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் பாரத துணைத் தலைவர்வேதாந்தம் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் கிராமக் கோவில் பூஜாரிகளின் 15 நாள் கோவில் வழிபாட்டுமுறைகள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட வேதாந்தம்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்து மத பழக்கங்களை கிண்டல் செய்வது தமிழக முதல்வர் கருணாநிதியின்வழக்கமாகி விட்டது. இந்த அரசால் எப்போதும் இல்லாத வகையில் விநாயகர்ஊர்வலம் தடை செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் வில்லுண்டி தீர்த்த்தில் உள்ள சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவதுஇந்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை. பெரும்பான்மை இந்துக்களுக்கு சிறுபான்மையினரால்பாதிப்பு உள்ளது.
தமிழக கோவில்களில் பக்தர்களால் வழங்கப்படும் பணம் வருடத்திற்கு ரூ110 கோடிஅளவுக்கு அறநிலையத்துறைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் கோவில்களுக்குமுழுமையான பராமரிப்பு செய்யப்படுவது இல்லை.
கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கோவில்கள்கொள்ளையர்களின் கூடாரம் ஆகி விடும். கருணாநிதி இந்துக்களின் ஓட்டுக்களைபற்றி கவலைப்படவில்லை.
வருகின்ற தேர்தலில் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதித்து நடக்கும்அரசியல் கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டும். இந்த தேர்தலில் தி.மு.க.வைதோற்கடிப்பதற்காக நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
பல்வேறு இந்து இயக்கங்களை ஒன்றிணைத்து மக்களிடையே தி.மு.க.விற்கு எதிராகஆதரவு திரட்டுவோம் என்றார் வேதாந்தம்.












Click it and Unblock the Notifications