அந்த 19 நாட்கள்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள சேஷாங்கனூர் கிராமத்தில் மனைவியின் பிணத்துடன் 19 நாட்களாக சாமியார் ஒருவர் வாழ்ந்தார்.
மனைவி இறந்த துக்கத்தைத் தாங்காமல் அவர் வீட்டுக்குள்ளேயே கல்லறை கட்ட முயன்றார். அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சேஷாங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகசுந்தரம் சுவாமிகள். வயது 65. இவரது மனைவி பெயர் சாந்தாபாய் வயது 65. இவர்கள் இருவரும் அரசுஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இவர்களின் மகன்கள், மகள்கள் திருமணம் செய்து கொண்டு வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
லோகசுந்தரம் கடந்த 30 ஆண்டுகளாக சேஷாங்கனூர் கிராமத்தில் ஆன்மீக மடம் என்ற மடத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். லோகசுந்தரம்வீட்டுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் யாரையும் தன் வீட்டில் இரவு தங்க அனுமதிப்பதில்லை.
இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவரது மனைவி சாந்தா பாய் கடந்த 21 ம் தேதி இறந்து போனார். மனைவி சாந்தாபாய் இறந்தசெய்தியை யாருக்கும் தெரிவிக்காமல் சாமியார் 2 நாட்கள் பிணத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் 23 ம் தேதி அவரது பூஜை அறையில் சிமென்ட் தரையை உடைத்துக் குழி தோண்டி அவரது மனைவி சாந்தாபாயின் பிணத்தைப் பட்டுப்புடலையால்சுற்றி புதைத்து அந்த இடத்தில் பூஜையும் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
மனைவி சாந்தாபாய் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டில் போட்டு கடந்த 19 நாட்களாக படுத்து உறங்கியுள்ளார். தினமும் பூஜையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தன் வீட்டு பூஜை அறையிலேயே தனது மனைவிக்குக் கல்லறை கட்ட அவர் நினைத்ததாகத் தெரிகிறது.
இதற்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார்லோகசுந்தரத்தின் மனைவியின் பிணத்தைப் புதைத்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி எரித்தனர். இதில் லோகசுந்தரம் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications