மஹா கூட்டணி பராக்!
சென்னை:
ஏக பரபரப்பில் இருக்கிறது தமிழக அரசியல் களம்.
தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின்கூட்டணி நிலவரம் பற்றி வருகின்ற தகவல்கள் வானிலை அறிக்கை மாதிரி அடிக்கடிமாறிக் கொண்டே இருக்கிறது.
பா.ம.க, தி.மு.கவிலிருந்து விலகி, அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்கிற சூழ்நிலைஇரு கட்சிகள் தரப்பிலும் இருந்தாலும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கசேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கின்றனர் பா.ம.கவும், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினரும். குறிப்பாக, விழுப்புரம் பகுதியில் உள்ள சில பகுதிகளில்டாக்டர் ராமதாஸ் நுழையவே கூடாது என்று எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரின் பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள்.பா.ம.கவின் பலம் வன்னியர்களின் வாக்குகள் என்பதால் இரண்டையுமே விட்டுக்கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமை தயாராக இல்லை என்கிறார் அ.தி.மு.க வின்முக்கியப் பிரமுகர்.
அவரே தொடர்ந்து பா.ம.கவை அ.தி.மு.க கூட்டணியில் இணைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனைசமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடக்கிறது என்றும் சொல்கிறார்.
பா.ம.க , அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் த.மா.காவுடன், தி.மு.க கூட்டணிஅமைத்தால் தான் சரி என்றும் தி.மு.க பிரமுகர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.அரசியல் தாண்டி, மூப்பனாருக்கும், கலைஞருக்கும் ஒரு நட்பு எப்பொழுதுமே உண்டு.அந்த நட்பு தி.மு.க , த.மா.கா கூட்டணியை மலர வைக்கும் என்று உறுதியாகநம்புகிறார்கள் தி.மு.க வினர்.
த.மா.கா தரப்பில் இன்னொரு விஷயமும் அடிபடுகின்றது. நாங்கள் எதிர்பார்க்கிற,ஆட்சியில் பங்கு என்கிற கருத்துக்கு அ.தி.மு.க தலைமை ஒப்புக் கொள்கிற மாதிரிதெரியவில்லை. அ.தி.மு.க மட்டுமல்ல, தி.மு.கவும் கூட ஆட்சியில் பங்கு என்கிறகருத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க , தி.மு.கவுக்குஎதிராக ஒரு வலுவான மூன்றாவது அணி அமைந்தால் என்ன என்றும் த.மா.காதலைமை யோசித்து வருகின்றது.
தி.மு.க , அ.தி.மு.க , மூன்றாவது அணி என்று மூன்று கோணத்தில் இந்த தேர்தலைசந்திப்பதே, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுடன் தற்பொழுது இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதையான விஷயம் என்றும் மற்றகூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மஹா கூட்டணி:
இதற்காக தி.மு.க கூட்டணியில் இருக்கும் மிக முக்கிய கட்சியான பா.ஜ.க, பா.ம.க,த.மா.கா இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து மஹா கூட்டணி அமைத்தால் அரசியல்நிலவரம் எப்படியிருக்கும்? என்கிற யோசனையும் மூன்று கட்சித்தலைவர்களிடம்நடந்து கொண்டிருக்கிறது.
மூன்று கட்சிகளுடன் ம.தி.மு.க வும் சேர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக வெற்றிஉறுதி என்கிற கருத்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. நான்கு கட்சிகளும் சேர்ந்தால்யாரை முதல்வராக முன்னிருத்துவது என்கிற கேள்வியும் கூடவே இருக்கிறது. அந்தவிவாதத்தில் மூப்பனாரை அனைத்துக் கட்சித் தலைவர்களுமே ஏற்றுக் கொள்வார்கள்என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
நான்கு கட்சித் தலைவர்களிடையே மஹா கூட்டணி பற்றிய யோசனைகள் தீவிரமாகஇருக்க அ.தி.மு.க, தி.மு.க தரப்பில், அப்படி ஒரு மஹா கூட்டணி அமைந்தால் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்கு இடமானதாகிவிடும் என்கிற கவலையும் இருக்கிறது. மஹா கூட்டணி முயற்சிகளை முறியடிக்கிறமுயற்சியில் இரு கட்சியின் முக்கியப் பிரகர்களுமே களமிறங்கியிருக்கிறார்கள்.
போதும் முப்பது ஆண்டுகளாக திராவிட கழகங்கள் தமிழகத்தை ஆண்டது என்கிறகருத்து மிக ஆழமாகவே மற்ற கட்சித் தலைவர்கள் மனதில் இருக்கிறது. இதனால்மூன்றாவது அணி அமைகிற நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறார்கள் தமிழகஅரசியல் பார்வையாளர்கள்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications