பஞ்சாப் டி.ஜி.பி. மீது பாலியல் பலாத்கார புகார்
சண்டிகர்:
பஞ்சாப் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மீது வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம்செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் பி.பி. திவாரி. தனதுவீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார சிறுமியை பாலியல் ரீதியாக பலாத்காரம்செய்து கொடுமைப்படுத்தியதாக அந்த சிறுமியும், அவரது வக்கீலும் புகார் கூறியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுமி மம்தா (19), ஹரியானா மாநிலம், ஷாஹாபாத்தைச் சேர்ந்தவர்.திங்கள்கிழமை சண்டிகரில் செய்தியாளர்களிடம் மம்தாவும், அவரது வக்கீல் நவ்கிரண்சிங்கும் அளித்த பேட்டி:
திவாரி அடிக்கடி மம்மதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது மனைவிஇதற்கு உடந்தையாக இருந்தார். இதுதொடர்பாக பஞ்சாப் போலீஸில் புகார்கொடுக்கவில்லை. காரணம் திவாரி பஞ்சாப் டி.ஜி.பியாக இருப்பதால், விசாரணைபாரபட்சமின்றி இருக்காது என்பதால் கொடுக்கவில்லை.
திவாரி தம்பதியினரின் செயல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளோம் என்றனர்.
இந்தப் புகாரை திவாரி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஜகஜித் சிங் சந்து என்பவர்தான்மம்தாவை வேலைக்கு சேர்த்து விட்டார். எனது மனைவிக்கு மூட்டு வலி இருப்பதால்அவருக்கு உதவியாக இருப்பார் என்பதால் மம்தாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன்.
இந்த நேரத்தில் ஜலந்தர் நகரிலிருந்து வந்த எனது அதிகாரி ஒருவர் சந்து ஒரு மோசடிப்பேர்வழி என்றும், அவர் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்துசந்துவைக் கூப்பிட்டுத் திட்டினேன். பின்னர் மம்தா, சந்துவின் உறவுப் பெண் இல்லைஎன்று தெரிய வந்ததால், அவரையும் வேலையிலிருந்து நீக்கி விட்டேன்.
இப்போது நானும், எனது மனைவியும் சேர்ந்து மம்தாவைக் கொடுமைப்படுத்தியதாகபொய்ப் புகார் கூறுகின்றனர். இதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹரியானா டி.ஜி.பி. ரத்தோர் மீது பலாத்காரப் புகார் உள்ளது. அவரது வீட்டில்வேலை பார்த்து வந்த பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தோர் பலாத்காரம் செய்யமுயன்றதாகவும், அது நடந்து 3 ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. தற்போது ரத்தோரை காலவரையற்றவிடுப்பில் செல்லுமாறு டிசம்பர் 5-ம் உத்தரவிடப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications