கொலம்பியாவில் ஒரே ஆண்டில் 19 மேயர்கள் கொலை
பொகோதா (கொலம்பியா):
கொலம்பியா நாட்டின் குயிபில் நகர மேயர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த நாட்டில், இந்த ஆண்டில் கொல்லப்படும் 19-வது மேயர்இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கொலம்பியாவில் குயிபில் நகர் உள்ளது. கொலம்பியாவில் சண்டை நடக்காதநாளே இல்லை எனும் அளவுக்கு வன்முறையும், துப்பாக்கிச் சண்டையும் சகஜம்.
வன்முறைக்கு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18 மேயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இப்போது 19-வது கொலை நடந்துள்ளது. குயிபில் நகர மேயர் அல்பர்டோ எலியாஸ்டோரஸ், கண்டினர்கா மாநில ஆளுநரைப் பார்க்க வந்திருந்தார்.
அவரது கார் ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிகளுடன் அவரது காரைச் சூழ்ந்தனர். பின்னர்காருக்குள் இருந்த மேயர் மற்றும் சிலர் மீது சரமாரியாகச் சுட்டனர்.
இதில் மேயரும், மேலும் 2 பேரும் அங்கேயே இறந்தனர். பட்டப்பகலில் இந்தபடுகொலை நடந்தது. தலைநகர் பொகோதவிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில்குயிபில் நகர் உள்ளது.
மார்க்சிஸ்ட் புரட்சிக்காரர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் அடிக்கடி நடக்கும் சண்டைகாரணமாக கொலம்பியாவில் எப்போதுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளன. 1990-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 35,000 பேர் இந்தவன்முறைச் சம்பவங்களுக்குப் பலியாகியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications