தமிழ்தேச எழுச்சியை தடுக்கமுடியாது .. நெடுமாறன்
திண்டிவனம்:
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் தேச எழுச்சியை அகற்ற முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தமிழக இளைஞர் முன்னனியின் 4-வது தமிழக மாநாடு திண்டிவனத்தில் நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணி தலைவர் யோகநாதன் தலைமை தாங்கினார்.மாநாட்டுக்கு வரவேற்புக் குழு தலைவர் கந்தசாமி வரவேற்றுப் பேசினார்.
மாநாட்டில் பழ.நெடுமாறன் பேசியதாவது:
தமிழர்களின் தேசிய தன்மையை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. மதத்தின் பெயரால் தமிழர்கள் கொடுமை படுத்தப்பட்டனர். தமிழ்இலக்கியங்கள் தான் நம்மை ஒன்று படுத்தின.
தமிழை இழிவு படுத்தும் போது வள்ளலார் எதிர்த்தார். சங்கராச்சாரியார் எல்லா மொழிகளும் வேண்டும் என்ற பொழுது அனைத்து மொழிக்கும் தாய்,தமிழ் என்றார் வள்ளலார்.
தமிழன் என்ற உணர்வை ஊட்ட பெரியார் பெரும் முயற்சி எடுத்தார். அதை தொடர்ந்து மற்றவர்கள் பின்பற்றினர். நம்முடைய தமிழ் தேசத்திற்கு யார்எதிரிகள் என்பதை அடையாளம் காண வேண்டும். நான் தமிழன் என்றால் தீவிரவாதி என்கிறார்கள்.
ராஜ்குமாரை மீட்க நான், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் சென்றோம். அகில இந்திய கட்சிகள் எங்களைதீவிரவாதிகள் என்றனர். நாங்கள் ராஜ்குமாரை மீட்டோம், பாராட்டினார்கள். இது மனித நேயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சி.
மாநில கட்சி ஆதரவு இல்லாமல் இனி அகில இந்திய கட்சிகள் முழுபலத்துடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாது. மாநில கட்சிகள் அந்தந்தமாநில மக்களின் நலன்களை பேணுவதால் செல்வாக்கு கிடைக்கிறது.
இருப்பினும் மொழி அடிப்படையில் செல்வாக்கு இல்லை. மாநில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் ஆட்சி அமைத்து தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளடெல்லியை நாடுகின்றனர்.
மாநிலக் கட்சிகளுக்கு டெல்லியில் செல்வாக்கு இருந்தும் அகில இந்திய கட்சியைச் சேர்ந்தவர்களையே பிரதமராக்குகின்றனர். இதனால் இவர்கள்தங்கள் மாநில மக்களின் செல்வாக்கை இழப்பார்கள். இது நான் மாநில கட்சிகளுக்கு விடும் எச்சரிக்கை.
இனிமேலாவது விழிப்புடன் செயல்பட்டு மாநிலங்களுக்கு சுயநிர்ணயம் அளிக்கும் சட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் அகிலஇந்திய கட்சிகளுக்கு ஏற்பட்ட கதிதான் மற்ற கட்சிகளுக்கும் ஏற்படும்.
தமிழ்நாடு தொழில் துறையில் முன்னணியில் இருப்பதாக கூறுகின்றனர். மகிழ்ச்சி, ஆனால் தமிழன் யாராவது தொழில் தொடங்கி இருக்கிறார்களா?தமிழ்தேச எழுச்சியை இனி யாராலும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முடியாது என்றார் நெடுமாறன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications