வாஜ்பாய் அரசுக்கு முதல் சறுக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ராஜ்யசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அயோத்திப் பிரச்சினை தொடர்பானதீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சிக்கு முதல் தோல்வி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக121 வாக்குளும், எதிராக 86 வாக்குகளும் கிடைத்தன.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள்அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்என்று எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் வற்புறுத்தி வருகின்றன.

இந்த சமயத்தில், அயோத்திப் பிரச்சினை குறித்து பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த சிலகருத்துக்கள் சர்ச்சையை அதிகப்படுத்தின. இந்த நிலையில், லோக்சபாவில் எதிர்க்கட்சிகள்இதுதொடர்பாக தீர்மானம் கொணடு வந்தன. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது.இதையடுத்து ராஜ்யசபையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது அது வெற்றிபெற்றுள்ளது.

2 நாட்களாக நடந்த சூடான விவாதத்திற்குப் பின் தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது.அதற்கு முன்பாக தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்படுவதைத் தவிர்க்க பிரதமர் வாஜ்பாய்முயற்சி செய்தார். அவர் பேசுகையில், அயோத்தியில், பாபர் மசூதியை இடிப்பதற்கு நான்எப்போதுமே ஆதரவாக இருந்ததில்லை.

இந்துக்களும், முஸ்லீம்களும் நேரடியாக பேசி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.அல்லது கோர்ட் மூலம் தீர்வு காணலாம். இது இரண்டையும் தவிர இந்தப் பிரச்சினையைத்தீர்க்க வேறு வழி ஏதும் இல்லை.

அயோத்தியில் நடந்த செயலுக்காக அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டியஅவசியமில்லை. எந்த அமைச்சர் இருக்க வேண்டும், யார் போக வேண்டும் என்று முடிவுசெய்ய வேண்டியது பிரதமரின் உரிமை.

அயோத்தி விவகாரம் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் குலைக்க காங்கிரஸ்தலைமையில் எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. இந்த சமயத்தில், தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் வாஜ்பாய்.

வாஜ்பாய் பேச்சுக்குப் பின்னும் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. தீர்மானத்தைஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து தீர்மானம்ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+