குவாத்ரோச்சி - புலிகள் தொடர்பு .. கூறுகிறார் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இத்தாலியைச் சேர்ந்த வியாபாரியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவரது மனைவி சோனியாகாந்தியின் நண்பரான ஒட்டோவியா குவாத்ரேச்சிக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று தமிழகஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஞசென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர் குவாத்ரோச்சி. அவர்தற்போது மலேசியாவில் உள்ளார். அவருக்கும், இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும்விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1985 முதல் தொடர்பு உள்ளது.

1991 ம் வருடம் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னும், குவாத்ரோச்சி, புலிகளுடனான உறவைதொடர்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது சோனியா காந்தியும், விடுதலைப்புலிகள் விஷயம் குறித்து காரசாரமான அறிக்கைகளை விடுவதில்லை.அவர்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளது போல் நடந்து கொள்கிறார்.

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான நளினி மீது இரக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்சோனியா காந்தி. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய இரண்டு ஐரோப்பிய பெண்களுடன், குவாத்ரேச்சிக்குத்தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ஏனெனில் ஐரோப்பாவைச் சேர்ந்த அந்த இரண்டு பெண்கள்தான், ராஜீவ் காந்தி கொலை விஷயத்தில்விடுதலைப்புலிகளுக்கு பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா தற்போது ஆர்எஸ்எஸ் சின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்பாரதிய ஜனதாவை ஆட்டிப்படைத்து, 2001 ம் வருடம் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல்நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மேலும் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்அமைப்பினரும் மிகத் தீவிரமாக உள்ளனர். வரும் ஜூலை மாதத்திற்குள் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில்அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

பாரதிய ஜனதா ஆதரவு எம்.பி.யான துக்ளக் ஆசிரியர் சோ, ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதற்குப்பின்னணி என்ன இருக்கும் என்று என்னால் எதுவும் கருத்துக் கூற முடியாது.

தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையினர் கண்டிப்பாக வீரப்பனைப் பிடித்தே தீருவார்கள் என்று நான்முழுமையாக நம்புகிறேன்.

வீரப்பனைப் பிடிப்பதற்காக இரு மாநில போலீஸாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்கண்டிப்பாக வீரப்பனைப் பிடித்தே தீருவார்கள் என நம்புகிறேன்.

வீரப்பனிடமிருந்து, நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தூதராகச்சென்றார். அவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளராக இருப்பதால்தான் அவரால் மிக எளிதாக ராஜ்குமாரை மீட்கமுடிந்தது. அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேலும் நெடுமாறன், திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியதாகப் பத்திரிக்கையில் படித்தேன்.அவர் கூட்டு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து கருணாநிதியிடம் விசாரித்திருக்கலாம்.

வீரப்பனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி கூறி, டாக்டர் ராஜ்குமாரை மீட்டு வந்தார் நெடுமாறன்.டெல்லியில் நெடுமாறன், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறார்என்றார் சுவாமி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+