டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
அடிலைட்:
ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில், மேற்கு இந்தியத் தீவுகள்அணியை வென்றது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும்ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
வெற்றி பெறுவதற்கு 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 4விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தைஆஸ்திரேலியா தொடர்ந்தது. வெற்றி இலக்கை மேலும் ஒரு விக்கெட்டை மட்டும்இழந்து ஆஸ்திரேலியா எட்டியது.
இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுஆஸ்திரேலியா உலக சாதனை படைத்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில்டிசம்பர் 26-ம் தேதி துவங்குகிறது.












Click it and Unblock the Notifications