ஆட்டோ டிரைவருக்கு தூக்குத் தண்டனை
சேலம்:
ஆட்டோவில் பயணம் செய்த பயணியிடம் வழிப்பறி செய்து கொலை செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது உதவியாளருக்கு தூக்குத் தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் சின்னப்புத்தூரைச் சேர்ந்தவர் தீர்த்தம் (35). இவர் நெத்திமேட்டுப் பகுதியில் உள்ள ஒரு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இன்ஜினியராகப் பணியாற்றிவந்தார். கடந்த 97ம் ஆண்டு ஜனவரி மாதம், சோளப்பள்ளத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்குச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் எம்.பி.ஏ வகுப்பிற்குச் சென்றார். பின்னர் சின்னப்புத்தூர் செல்ல பஸ்சிற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போதுஅவரது உறவினர் அத்தியப்பன் என்பவர் வந்தார். அவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் அறிமுகம் ஆனவர் என்பதால் ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். ஆட்டோ செல்லும் வழியில், தீர்த்தம்,ஆட்டோ டிரைவரிடம் 100 ரூபாயைக் கொடுத்து மது வாங்கிக் குடித்தார்.
பின்னர் ஆட்டோவில் ஏறிக் கொண்டார். ஆட்டோ டிரைவர் மாது அவரது உதவியாளர் செல்வம் ஆகியோர் தீர்த்தத்தைக் கடத்திச் சென்றனர். இரவு 3மணி அளவில் தீர்த்தத்தை வயரால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் பிரேஸ்லெட் உள்பட 22 ஆயிரம் மதிப்புள்ளபொருட்களைப் பறித்துக் கொண்டனர். தீர்த்தத்தின் உடலை கிணற்றில் வீசித் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மது மற்றும் அவரது உதவியாளர் செல்வம் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம்3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி ஜபருல்லா கான் தனது தீர்ப்பில், பாதுகாப்பாக பயணிகளை ஏற்றிச் சென்றுஇறக்கி விட வேண்டிய ஆட்டோ டிரைவரே, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சமுதாயத்தில் மிகப் பெரிய குற்றமாகும். எனவே இருவரும்சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்களாவர். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications