இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்
மதுரை:
மதுரையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, கார் டிரைவரைப் படுகொலை செய்து காருடன் தப்பித்த இலங்கையைச் சேர்ந்த கும்பலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
1992 ம் வருடம் ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ராஜபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கு நின்று கொண்டிருந்தகார் டிரைவரிடம் கார் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டது. அதற்கு அவரும் சரி என்று கூறினார்.
இதையடுத்து, அக்கும்பல் முறம்பு என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி கார் டிரைவருடன் சேர்ந்து முறம்புக்குச் சென்றது. கார் பாதி வழியில்சென்று கொண்டிருந்த போது அக்கும்பல் டிரைவரை மிரட்டி அவரைப் படுகொலை செய்து அருகிலிருந்த கரும்பு தோட்டத்தில் வீசி விட்டு காருடன் தப்பித்துவிட்டது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்துக் கொலைக் கும்பலைத் தேடி வந்தனர். பின்னர் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உள்பட 3பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ராமலிங்கம் வழக்கைவிசாரித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், இவ்வழக்கில் கொலைக்குற்றம் மற்றும் கார் கடத்தலில் ஈடுபட்டுள்ள 3 பேருக்கும் ஆயுள் தண்டனைவிதிப்பதாகத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications