சட்டசபைக்கு ஒரே நாளில் வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
தேர்தல் குறித்து, சென்னை வந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அடையாள அட்டைவழங்கும் பணி இன்னும் முடிவடையாததால் தேர்தல் தேதியை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடக்கிறது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்துவிவாதிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
வரும் மார்ச் மாதத்தில்தான் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும். அசாமில் ஏப்ரல் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை தேர்தல் நடத்தலாம் என்று அந்தமாநில அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் 80 சதவீதவாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும்.
சட்டசபைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நடப்பதையொட்டி சம்பந்தப்பட்டமாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி லோக்சபா தொகுதிக்கும் தேர்தல் நடக்கும். இதற்கேற்ப விதிகளைத் தளர்த்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்உண்டு. தற்போது உள்ள நிலையில் வரும் ஜனவரிக்குப் பிறகு தான் தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது என்பது முழுமையாகத் தெரியவரும்.
இருப்பினும் தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications