பதவி கொடுத்தால் கூட்டணி .. மக்கள் தமிழ் தேசம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில், அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மக்கள் தமிழ் தேசம் கூட்டணி வைத்துக் கொள்ளும். அல்லது மூன்றாவதுஅணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அதிகாரப்பங்கீடு தருவதைப் பொறுத்து சம்பந்தப்பட்டகட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஜனவரி மாதத்தில் முடிவு செய்வோம். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபைத்தொகுதிகள் உள்ளன. இதில் 90 இடங்களில் மக்கள் தமிழ் தேசம் போட்டியிடும். மக்கள் தமிழ் தேசத்தில் பெரும்பாலானவர்கள் யாதவர்கள். இருப்பினும்கட்சியில் உள்ள 40 சதவீதத்தினர் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள்.
டிசம்பர் 23 ம் தேதி தமிழ் தேசம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள்பங்கேற்பார்கள். சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள எம்பியும் முன்னாள்மத்திய அமைச்சருமான காந்தி சிங் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
மாநாட்டைத் தொடர்ந்து நடக்கும் பேரணியில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் உரையாற்றுவார்கள் என்றார்கண்ணப்பன்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications