தமிழர் ஆதரவு சட்டம் .. சந்திரிகா கூறுகிறார்
கொழும்பு:
இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய அரசியல் சட்டம்கொண்டு வரப்படும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதன்கிழமை தெரிவித்தார்.
தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு இல்லை. இருப்பினும் புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவைக்கொண்டு வர சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.
வேறு வழியில் அரசியல் சட்டத்தைக் கொண்டு வர சந்திரிகா முயன்று வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து பாரீஸில் நடந்த கூட்டத்தில் சந்திரிகாபேசுகையில், 2001 ம் ஆண்டு இந்த அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும். ஆகஸ்ட் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அதற்குமுன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாலும், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத காரணத்தாலும் சிறுபான்மையினருக்கு அதிகஅதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.
முன்னதாக, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி குறித்து நடந்த கருத்தரங்கில் சந்திரிகா பேசுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் சண்டைநிறுத்தம் அறிவிக்கத் தயார். ஆனால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம்கையெழுத்தாகும் வரை ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறங்கி விட்டோம். ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமுடன் இருந்தால்நாங்கள் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கத் தயாராக இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை அவர்களது நிபந்தனைகள் குறித்துஎங்களுக்கு எதுவும் தெரியாது என்றார் சந்திரிகா.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications