சிங்கப்பூர் போல பாண்டி. மாற வேண்டும்
பாண்டிச்சேரி:
சிங்கப்பூர், ஹாங்காங் போல பாண்டிச்சேரியை மாற்ற வேண்டும் என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசசுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில், மாநில சுற்றுலாத்துறை சார்பில் சார்பில் நடந்த ஒரு மாத கால வர்த்தக விழாவை துவக்கி வைத்துஅவர் பேசுகையில், பாண்டிச்சேரியில் பொழுதுபோக்கு மையம் அமைக்க சில தனியார் நிறுவனங்கள்முன்வந்துள்ளன. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
பாண்டிச்சேரி மாநிலம் தொடர்பான தகவல் மையங்களை நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும்அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுதொடர்பாக ரூ. 10 லட்சம் நிதியை மத்திய அரசுஒதுக்கியுள்ளது. இதைக் கொண்டு முதல் கட்டமாக 5 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்படும்.
பாண்டிச்சேரியில் சுதந்திர வர்த்தகத்திற்கு வகை செய்யும் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
