உத்தராஞ்சலுக்கு சிறப்பு அந்தஸ்து
அல்மோரா:
உத்தராஞ்சல் மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக முதல்வர் நித்யானந்த சுவாமி புதன்கிழமை தெரிவித்தார்.
சமீபத்தில் புதிய மாநிலமாக உருவானது உத்தராஞ்சல். தற்போது இதற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பவுள்ளதாக அந்த மாநில முதல்வர் நித்யானந்தசுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தராஞ்சல் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார். இதற்கான சில நடைமுறைகள் பாக்கியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து பிரிந்து உத்தராஞ்சல் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டதில் 1,700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவதுஇது புதிய மாநிலம் உருவாக்க ஏற்பட்ட செலவாகும். மத்திய அரசு இந்தப் பணத்தை ஈடுகட்ட நிதியுதவி செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது என்றார்நித்யானந்த சுவாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications