பெரம்பலூரில் குடும்பத்தோடு 5 பேர் தற்கொலை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அழகாபுரிபுரம் கிராமத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களில் ஒருவரான 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வருபவர் பத்மநாபன் (45). இவருக்கு நிதி நெருக்கடி இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து இவர் தனது சொந்த ஊரான அழகாபுரிபுரத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
சொந்த ஊரில் மனைவி தேவகி (40), மகள்கள் சுப்புலட்சுமி (18), கஸ்தூரி (15) மற்றும் மகன்கள் சரவணன் (15), கோபி (13) ஆகியோருக்குவிஷத்தைக் கொடுத்து தானும் குடித்தார்.
இவர்களில் கோபியைத் தவிர அனைவரும் இறந்தனர். கோபி உயிருக்குப் போராடிய நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications