டென்னிஸ் அணிக்கான பயிற்சியில் மாற்றம் தேவை .. ரமேஷ் கிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய டென்னிஸ் அணிக்குத் தற்போது தரப்படும் பயிற்சியில் கூடுதல் முன்னேற்றம்தேவை என்று இந்திய அணியின் விளையாடாத கேப்டன் ரமேஷ் கிருஷ்ணன் கருத்துத்தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லியாண்டர் பயஸ், மகேஷ்பூபதி போல நிறைய வீரர்கள் உருவாக வேண்டுமானால், பயிற்சி முறையில் மாற்றம்தேவை.
இளைஞர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கேற்ற தகுதியைவளர்க்கும் விதத்தில் பயிற்சி முறை அமைய வேண்டும்.
வீரர்களும் தங்களது உடல் தகுதியை வளர்த்துக் கொள்வதும், அதில் அதிக அக்கறைகாட்டுவதும் அவசியம் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications