மடோனாவுக்கு நாளை 2-வது திருமணம்
டோர்நாக் (ஸ்காட்லாண்ட்):
அமெரிக்க பாப் இசைப் பாடகி மடோனாவுக்கும், இங்கிலாந்து திரைப்பட இயக்குநர் கை ரிட்சிக்கும்வெள்ளிக்கிழமை திருமணம் நடக்கிறது.
ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்கிபோ காஸ்டிலில் உள்ள கத்தீட்ரல் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்கிறது.கதீட்ரல் மண்டபத்தில் நடக்கும் மடோனாவின் திருமணத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானபத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் குவிந்து விட்டனர்.
மடோனா திருமணத்தையொட்டி கத்தீட்ரல் ஹால் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஆலன் டிரம்மன்டு கூறுகையில், மடோனா திருமணத்தை பார்க்கவந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு போதிய வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த வித அசம்பாவிதச்சம்பவமும் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தத் திருமணம் மிகவும் சந்தோஷமான, பரவசமான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மடோனா- கை ரிட்சி திருமணத்தையொட்டி ஸ்காட்லாந்த் நகரமே மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. இருப்பினும்ரசிகர்களால் பிரச்சனைகளோ, பதட்டமான சூழ்நிலையோ ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சப்படுகிறது.மடோனாவுக்கும், கை ரிட்சிக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அலாஸ்தீர் டெய்லர் என்பவர் கூறுகையில், மடோனா திருமணம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனால் வந்துகுவிந்துள்ள பத்திரிக்கையாளர்களைப் பார்க்கும்போது மிகுந்த எரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் அவர்களதுதொல்லைகளைத் தாங்க முடியவில்லை. பத்திரிக்கைக்காரர்கள் மடோனா திருமணத்துக்கு அதிக முக்கியத்துவம்கொடுக்கிறர்கள்.
மடோனாவின் முதல் திருமணம்:
1985 ம் வருடம் கலிபோர்னியாவில் மடோனாவின் முதல் திருமணம் நடந்தது. அப்போது திருமணம் நடந்துகொண்டிருந்த மண்டபத்தின் முன் பத்திரிக்கையாளர்களின் ஹெலிகாப்டர் வட்டமடித்துக் கொண்டிருந்தது.அதனால் இந்த முறை அது போல் பத்திரிக்கையாளர்கள் வரக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்மடோனா என்றார்.
பியானோ:
மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படவுள்ள தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மடோனா 12, 500 பவுண்ட்மதிப்புள்ள பியானோ ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications