சண்டை நிறுத்த நீட்டிப்பு: ஹூரியத் பாராட்டு
ஸ்ரீநகர்:
ரம்ஜானையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதற்கு அகில இந்திய ஹூரியத் அமைப்பு பாராட்டுதெரிவித்துள்ளது.
மேலும், காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்களின்தலைவர்களை சந்தித்துப் பேச, உயர் மட்டக் குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும்உறுதி அளித்துள்ளது.
ஹூரியத் அமைப்பு தலைவர் மிர்வைஸ் மெளல்வி உமர் பரூக்கின் வீட்டில் தொடர்ந்து 6 மணி நேரம் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் ஹூரியத் அமைப்பில் இடம்பெற்றுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் வாபஸ் வாங்கியதையும் அவர்கள்வரவேற்றுள்ளனர். இந்தியாவின் சண்டை நிறுத்த நீட்டிப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான்ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்பட்டது, காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வழி வகுக்கும் என்றும் ஹூரியத்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 15-ம் தேதி ஹூரியத் அமைப்பின் தலைவர் அப்துல் கனி பட் தலைமையில் 3 பேர் கொண்ட குழுபாகிஸ்தான் சென்று அமைதிப் பேச்சுக்கான நடவடிக்கையை மேற்கொள்வர். ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதஅமைப்பின் தலைவர்களிடமும் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவர்.
3 பேர் குழுவில் இடம்பெறும் மேலும் 2 பேர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று ஹூரியத் அமைப்புவெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications