ஆட்சியில் பங்கு வேண்டும் .. எஸ்.ஆர்.பி.
சென்னை:
ஆட்சியில் பங்கு என்னும் கோரிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் உறுதியுடன் இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான,முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறினார்.
ஆட்சியில் பங்கு தரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் பேட்டி அளித்த எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியம் இது குறித்துக் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துள்ளதால் பல இடங்களில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விவசாய விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே அரசு அவர்கள் மீதான ஜப்தி நடவடிக்கைகளைகைவிட வேண்டும். மேலும் நிலவரி போன்றவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். அதே போல் விவசாய கடன்களுக்கான வட்டியை முழுவதுமாகதள்ளுபடி செய்து கடன் தொகையை நீண்டகால தவணைகளில் அரசு பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு அரசு புதிய கடன்களை வழங்க முன் வர வேண்டும். அதே போல் கரும்பு பாக்கியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சென்னையிலும் இதே போல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநில அரசும், மாநகராட்சியும் முயற்சி செய்து கிருஷ்ணா நதி நீரைப்பெற வேண்டும். மகளிர் மசோதா பிரச்சனையில் பி.ஜே.பி. நாடகமாடி வருகின்றது. பி.ஜே.பிக்கு உண்மையிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள மஹா கூட்டணி பற்றிய விவரம் சரி வரத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்களும்தி.மு.கவை எதிர்க்கிறோம். தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தற்பொழுது மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலின் போதும் இது தொடர வேண்டும் என்பதுதான்எங்கள் விருப்பம். எனினும் இந்த கூட்டணி தொடருமா என்பது சட்டமன்றத் தேர்தலின் போதுதான் தெரிய வரும்.
பா.ம.க , அ.தி.மு.க அணிக்கு வந்தால் அப்பொழுது அது பற்றிக் கருத்துக் கூறுவோம். தனித்தே ஆட்சி அமைப்போம் என்று ஜெயலலிதா கூறியிருப்பதுஅவரது கட்சியின் நிலைப்பாடு.
எங்களைப் பொறுத்தவரை, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று த.மா.கா நிறைவேற்றிய தீர்மானம் இன்னமும் அப்படியே தான் உள்ளது. இந்ததீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அ.தி.மு.க நிலைப்பாட்டை அவர்கள் கூறியுள்ளார்கள். தமிழகத்தில் தற்பொழுதுள்ள சூழ்நிலையில்மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications