ஸ்டாலினை நினைவுகூர்ந்த ஜார்ஜியா
Subscribe to Oneindia Tamil
திபிலிசி:
முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில் சோவியத் சர்வாதிகாரி ஜோசப்ஸ்டாலினின் 122-வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட ஜார்ஜியர்கள், ஸ்டாலின் பிறந்த கிராமமான கோரியில் நடந்தபிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் காலத்தின்போது நடந்த அடக்குமுறை நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானசோவியத் யூனியன் மக்கள் உயிரிழந்தனர். இருப்பினும், இப்போதைய ரஷியாவிலும்,ஜார்ஜியாவிலும் ஸ்டாலினுக்கு தனி இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் பிறந்த ஆண்டு குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஜார்ஜியாவில்அவரது பிறந்த ஆண்டு 1878- ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்1870-க்கும் 79-க்கும் இடையே பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1953-ம்ஆண்டு ஸ்டாலின் இறந்தார்.












Click it and Unblock the Notifications