அசாமில் 8 பேர் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அசாமில் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் உள்பட 8பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர்.
போலீஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறியதாவது:
தலைநகர் கவுஹாத்தியிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகள் சரணாலயத்தில் பூடோலேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகளைநோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்ததீவிரவாதிகள்.
மனாஸ் புலிகள் சரணாலயம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டையடுத்து அங்கிருந்த பலதீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.
முன்னதாக, பூடோலேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகள் அசாமில் வாழும் பழங்குடியினருக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்றகோரிக்கையை முனஅவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசாம் லட்சுமிபூர் மாவட்டத்தில், வேறு மாநிலங்களிலிருந்து குடியேறியிருந்த முஸ்லீம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் இறந்தனர்.இவர்கள் நான்கு பேரும் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்.
இச்சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்திருந்தனர். இந்தத் தீவிரவாதிகள்எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று உடனடியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் உல்பா தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றுபோலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications