3--வது அணி அமைப்போம் .. முலாயம் சிங்
சென்னை:
தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப் பாடுபடுவோம் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் மகளிருக்கு பத்து சதவீத ஒதுக்கீடு போதுமானது என்றும் இதற்காக தனி மசோதா தேவையில்லை என்றும் தேர்தல்ஆணையமே ஒரு எளிய அறிவிக்கையின் மூலம் அமல் படுத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
மக்கள் தமிழ்தேச கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங்யாதவ் சனிக்கிழமை சென்னை வந்தார். அவர் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய கட்சிகள், முறையே பி.ஜே.பியுடனும், காங்கிரஸூடனும் கூட்டணி வைத்துக் கொண்டுள்னன.
சமாஜ்வாதி கட்சி பி.ஜே.பி காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்துள்ளது. எனவே தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் மூன்றாவதுஅணியை அமைக்க தகுதி வாய்ந்த கட்சி சமாஜ்வாதி கட்சிதான்.
தமிழ்நாட்டில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க பாடுபடுவோம்.
கட்சியை மாநில அளவில் வலுப்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டி எல்லா மாவட்டங்களிலும் சென்று உறுப்பினர்களை சேர்த்து கட்சியைவலுப்படுத்தும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் போட்டியிடும்.
மகளிருக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை இப்பொழுதைய வடிவில்சமாஜ்வாதி கட்சி எதிர்க்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே சமயம் பெண்க ள உயர்த்துவதற்காக ஆண்களை பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாது.
ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும், தற்பொழுது மகளிருக்கு கேட்கும் 33 சதவீதத்தையும் சேர்த்தால்பிற வகுப்பினரைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிட வெறும் 45 சதவீதம் இடங்கள் மட்டுமே உள்ளன.
அதே சமயம் பெண்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவர்களுக்கு எந்தவித தடையும் இல்லை. அதனால் அவர்களுக்கு பத்துசதவீத இடஒதுக்கீடு மட்டும் போதும் என்பதுதான் எங்கள் கருத்தாகும்.
அவர்கள் எந்த இடங்களிலும் போட்டியிடலாம், தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் போட்டியிடலாம். பொதுப்பட்டியலிலும் அவர்கள்போட்டியிடமுடியும். பெண்களுக்கு உரிமையளிக்கிறோம் என்ற பெயரில் குருட்டாம் போக்கில் இந்த மசோதாவை சட்டமாக்கினால், ஆண் வர்க்கம்பெரும் பாதிப்பிற்குள்ளாகும்.
இதற்கென தனி மசோதாவும் தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும். பத்து சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தல் கமிஷன் ஒரு எளிய அறிவிக்கையின்மூலம் அமல் படுத்தலாம் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications