கோவில்கள் இடிப்பு .. நெல்லையில் பதட்டம்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பத்து இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இடித்து நொறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்துஇந்துக்கள் ஊர்வலமாக சென்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மசூதி ஒன்றின் மீது குண்டு வீச்சு நடந்தது. மசூதியின் உள்ளே சமையல் செய்துகொண்டிருந்த அப்துல் ரஷீத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வீச்சு மற்றும்படுகொலை சம்பவத்திற்கு இந்து இயக்கங்கள் தான் காரணம் என்று முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டின.
ஆனால் குடும்பத் தகராறு காரணமாகவே இந்த படுகொலை நடந்ததாக இந்து இயக்கங்கள் கூறிவந்தன.இந்த நிலையில், கொலை வழக்கில் திடீர்திருப்பம் ஏற்பட்டது.
படு கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீத்தின் மகன் ஆட்களை வைத்து தன் தந்தையை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்துரஷீத்தின் மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து வழக்கை போலீஸார் திசை திருப்ப முயற்சி செய்வதாகக் கூறி நெல்லை மாவட்ட ஜிகாத் கமிட்டி மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டத்தில் கண்டனக் கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் வெள்ளிக்கிழமை நெல்லையில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சுமார் பத்து இந்துக் கோயில்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள பிள்ளையார் கோயில், சந்தன மாரியம்மன் கோயில், சுடலை மாடன் கோயில், செண்பக அம்மன் கோயில்,அம்பாசத்திரம் சாலை சாஸ்தா கோயில் , ஆசாத் சாலையில் உள்ள அம்பிகை தங்கம்மன் கோயில் , மேலப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சாஸ்தா கோயில்பாளையங்கோட்டை சாலையில் உள்ள வினாயகர் கோயில் ஆகிய பத்து கோயில்கள் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
இந்த கோவில்களின் மதில்கள், உண்டியல்கள் ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சனிக்கிழமை அதிகாலை கோயிலுக்குச்சென்ற இந்துக்கள் கோயில் நொறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்துக்கள் பெரும்அளவில் கூடத் தொடங்கினர். கூட்டம் கூட்டமாக சென்று கடைகளை அடைக்கச்சொல்லி வற்புறுத்தினர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மறியல் போராட்டங்களும் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications