இன்று எம்.ஜி.ஆர்.நினைவுதினம்
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுதினம் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
சென்னையில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். அவர் தனது கட்சித் தொண்டர்கள் 2500 பேருடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர்.சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில்தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும்.
கடந்த நான்கரை வருட ஆட்சியில் பழிக்குப்பழி வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கருணாநிதி. தனக்காகவும், தன்குடும்ப நலனுக்காகவும் அரசியலைப் பயன்படுத்திக் கொள்கிறார். மக்களின் தேவைகளையோ, எதிர்பார்ப்புக்களையோ அவர் கொஞ்சமும் உணர்ந்துகொள்ளவில்லை.
தற்போது ஸ்டாலினை அரசியலில் மிகப்பெரிய ஆளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கருணாநிதி என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர்எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
புதுவையில் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுவதையடுத்தது புதுவையில் அவருக்கு நினைவஞ்சலிசெலுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநில செயலாளர் ரவீந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் அந்த ஊர்வலத்தில்கலந்து கொண்டவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக, அதிமுக, திராவிடக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications