திண்டுக்கல்லை பயமுறுத்திய சிறுத்தை
திண்டுக்கல்:
திண்டுக்கலில் 5 பேரைக் கடித்துக் குதறிய சிறுத்தையை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கடும் முயற்சிக்குப் பின் பிடித்தார்.
சனிக்கிழமை காலை நடந்த இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
திண்டுக்கல் நேருஜி நகரில் வசித்து வருபவர் டாக்டர் சீனிவாசன். இவரது மனைவி ஜானகி. இவர்கள் வீட்டு சமையல் அறையில் சிறுத்தை பதுங்கியிருந்தது.
சமையலறையில் பதுங்கியிருந்த சிறுத்தையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஜானகி, உடனடியாக பக்கத்து வீட்டிலுள்ள போஸ் என்பவரை உதவிக்குஅழைத்தார். அவர் வந்து பார்த்த போது 5 அடி நீளமுள்ள சிறுத்தை போஸ் மீது பாய்ந்தது. உடனே அவர் அங்கிருந்து வெளியேறி, சிறுத்தை பதுங்கியிருந்தசமையலறையைப் பூட்டினார்.
போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்ததும், சிறுத்தை பதுங்கியிருந்த அறையை கட்டிடத் தொழிலாளி சந்திரன் திறந்தார். அடுத்தநிமிடம் அவர் மேல் சிறுத்தை பாய்ந்தது. சந்திரனின் கையைக் கடித்து விட்டு மாடிக்குத் தாவியது. பின்னர் அங்கிருந்த கார்ஷெட்டுக்குள் புகுந்தது.
கார் ஷெட்டிலிருந்து சிறுத்தையைப் பிடிப்பதற்காகப் போலீஸார் முயன்றனர். ஆனால் அது அங்கிருந்து தப்பித்து ஓடி, பக்கத்து வீட்டுக்குத் தாவியது. இதைப்பார்த்ததும் அங்கு கூடி விட்ட பெருங்கூட்டத்தினர் அதை நோக்கி கற்களை வீசினர்.
உடனே சிறுத்தை அங்கிருந்து தப்பி சாலையில் ஓட ஆரம்பித்தது. அவ்வழியே வந்த இளங்கோ மற்றும் சுரேஷ் ஆகியோரையும் தாக்கியது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் செல்லம் சிறுத்தையை நோக்கிப் பாய்ந்தார். சிறுத்தையுடன் தைரியமாக கட்டிப்புரண்டு சண்டை போட்டார். செல்லத்தின் இருகைகளையும் சிறுத்தை கடித்தது. இதையடுத்து இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் ராஜா சிறுத்தையை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். அதற்குள் அங்கு நின்றுகொண்டிருந்த முத்து என்பவர் தனது சைக்கிளை சிறுத்தை மீது ஏற்றினார். உடனே அது தடுமாறி விழுந்தது.
பின்னர் சிறுத்தையைக் கயிறால் கட்டி லாரியில் ஏற்றிக் கால்நடை மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுத்தைப் புலி இறந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications