ஆனந்த் உலக செஸ் சாம்பியன்
டெஹ்ரான்:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன்ஆனந்த் வென்றுள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள முதல் இந்தியர் ஆனந்த் என்பதுகுறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் டெல்லியிலும் இறுதிப் போட்டிகள் ஈரான்தலைநகரான டெஹ்ரானிலும் நடைபெற்றன.
டில்லியில் நடந்த லீக் போட்ட்களில் பல இந்திய வீரர்கள் தோல்வியடைந்தாலும்கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து வெற்றி வாகை சூடியபடியேஇருந்தார்.
அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரரை வென்ற ஆனந்த் இறுதிப் போட்டிக்குதகுதி பெற்றார். இதன் மூலம் டெஹ்ரானில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் போட்டியில்ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவுடன் மோதினார்.
மிகவும் சிறந்த ஆட்டக்காரராக கருதப்படும் ஷிரோவுடன் ஆனந்த் மோதும் ஆட்டம்மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இறுதிச் சுற்றில் மொத்தம் 6 போட்டிகள்உண்டு.
ஆரம்பம் முதலே ஆனந்த் மிகவும் சிறப்பாக ஆடிவந்தார். முதல் போட்டியை ஆனந்த்டிரா செய்தார். இரண்டாவது போட்டியில் முதல் வெற்றியை பெற்றார். அதன் பின் எந்தபின்னடைவும் இல்லை. தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் நான்காவது போட்டி துவங்கியது. ஏற்கனவே மூன்றுபுள்ளிகள் பெற்றறிருந்ததால் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியை டிரா செய்தாலேஆனந்த் தோல்வியை தவிர்க்கும் நிலை இருந்தது.
ஆனந்த் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். ஷிரோவ் எப்படியும் இந்தஆட்டத்தை டிரா செய்து விட வேண்டும் என தடுப்பாட்டத்தில் ஈடுபட்டுவிளையாடினார். ஆனால், ஆட்டத்தின் 41-வது மூவில் அவர் தோல்வியடைந்தார்.
நான்காவது போட்டியில் வென்றதன் மூலம் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தைவென்றுள்ளார். இதனால் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களை நடத்த வேண்டியஅவசியமில்லாமல் போனது.
ஆனந்த் 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை உலக செஸ்சாம்பியன் பட்டத்தை ரஷ்ய வீரர்களே தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனந்த், ஆசியாவிலேயே முதல் முதலாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர்என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications