சண்முகம் விலகக் கோருகிறது பா.ஜ.க
புதுவை:
புதுவையில் முதல்வர் சண்முகம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியில் நீடிப்பதற்குதார்மீக உரிமை இல்லை என்று புதுவை பாரதிய ஜனதா திங்கள்கிழமை கூறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி புதுவை பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரகு சுந்தரராமன் ஆகியோர் கூறியதாவது:
புதுவையில் சண்முகம் அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்று விட்டனர். இதனால் முதல்வர் சண்முகத்தின் ஆட்சிபலம் இழந்து விட்டது. அவர் தானாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது கவர்னர் ரஜினிராய் அவரை சட்டசபையில் நம்பிக்கைவாக்கெடுப்புக் கோர உத்தரவிட வேண்டும்.
எம்.ஜி.ஆர்.அதிமுக வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அனந்தவேலு சண்முகம் அமைச்சரவைக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.ராஜாராமனும் எழுத்துப்பூர்வமாக தனது ஆதரவைக் கொடுக்கவில்லை.
புதுவையில் இதுவரை தேசிய ஜனநாயகக் கட்சி உருவாகவில்லை. தேர்தல் நேரத்தில் தேசிய ஜனதாக் கட்சி உருவாக நாங்கள் முயற்சிப்போம் என்றார்கள்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications