கூட்டணி: ராமதாசே முடிவு செய்யட்டும் .. கிருபாநிதி
மதுரை:
தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பதை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ்தான்முடிவு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும். கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா,இல்லையா என்பதை பா.ம.க. தலைவர் ராமதாஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.
வாழப்பாடி ராமமூர்த்திக்கும், ராமதாசுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு அவர்கள் சொந்த விஷயம்.இதில் தேசிய ஜனநாயக கூட்டணி செய்வதற்கு எதுவும் இல்லை.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தே.ஜ.கூட்டணியில் நீடிக்கக்கூடாது என ராமதாஸ் நினைத்தால் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால்தே.ஜ.கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.
பா.ம.க. கூட்டணியை விட்டு விலகினால், வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. தே.ஜ கூட்டணி வெற்றிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ளதாக கூறுவது தவறு. தமிழகத்தில் பா.ஜ.க., தி.மு.க.தலைமையிலான கூட்டணியில்தான் நீடிக்கிறது.
பா.ஜ.க.வின் பலத்தை பொறுத்து வரவிருக்கும் தேர்தலில் இடங்கள் கேட்போம். த.மா.கா.தலைவர்பாளையங்கோட்டை மசூதியில் நடைபெற்ற கொலைக்கு பா.ஜ.கவை குறை கூறுவது தவறு. தற்போது போலீசார்அந்த கொலை வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மகனையே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் விஷவ ஹிந்து பரிஷத் ராமர் கோவில் கட்டுவதாக உள்ளார்கள் என கூறப்படுகிறது. அவர்கள்சட்டம், ஒழுங்கிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார்கள். நீதிமன்ற முடிவின் படியேமுடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சிலர், முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக கேரளாவிற்கு செல்லும் உணவை தடைசெய்து வருகின்றனர். இது கேரள மக்களை மிகவும் பாதிக்கும். முல்லை பெரியார் அணை விவகாரம்அரசியலாக்கப்படக்கூடாது. அணை பிரச்சனை விவகாரம் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும்.இல்லையென்றால் இது இரு மாநில மக்களையும் பாதிக்கும்.
தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது போல் முல்லை பெரியார் அணை உயரத்தை உயர்த்துமாறு பிரதமைர தமிழகபா.ஜ.க. வற்புறுத்தும் என அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications