கைதிகளை குஷிப்படுத்திய உள்ளத்தை அள்ளித் தா

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் மத்திய சிறையில் விதிமுறைகளை மீறி, சிறை நேரம் முடிந்ததும் தமிழ் சினிமா திரையிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளுக்கும் பொதுவான பல விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படி கைதிகளின் மனநிலையில் மாற்றம்ஏற்படுத்துவதற்காக மாதம் 1 அல்லது 2 சினிமாக்களைத் திரையிடலாம்.

இந்த சினிமாக்களை சிறைநேரம் முடிவதற்குள் காட்டி விட வேண்டும். ஏனெனில் வெவ்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த ரவுடிகள் ஒரே இடத்தில்கூடுவதால் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏற்படுடலாம் என்பதால்.

இருட்டி விடுவதால் கைதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினம். இது போன்ற பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் இருக்க சிறை நேரம்முடிவதற்குள் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் சேலம் சிறையில் கடந்த மாதம் பிரசாந்த், தேவயானி நடித்த அப்பு படம் திரையிடப்பட்டது. பொதுவாக அல் உம்மா தீவிரவாதிகளுக்குப் படம்பார்க்க அனுமதியில்லை. ஆனால் அவர்களும் அப்பு படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இந்தச் செய்தி தெரிய வந்ததும் மேல் அதிகாரிகள், சேலம்மத்திய சிறை அதிகாரிகளை எச்சரித்திருந்தனர்.

ஆனால் விதிமுறைகளையும், மேல் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் சேலம் மத்திய சிறையில் சிறை நேரம் முடிந்த பின் கடந்த சனிக்கிழமைகார்த்திக், ரம்பா நடித்த உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

சினிமா முடிய இரவு 10.30 மணி ஆகி விட்டது. அந்த இரவில் பிரச்சனை செய்யும் கைதிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், சிறை போலீஸாருக்குபோதும், போதும் என்றாகிவிட்டது.

படம் முடிந்து கைதிகளை சிறைக்குள் அனுப்பி, கணக்கெடுப்பதற்குள் இரவு 12 மணி ஆகி விட்டது. பொதுவாக தமிழகத்தில் உள்ள பிற சிறைகளில் நள்ளிரவு12 மணிக்கெல்லாம் யாரும் தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் சேலம் சிறையில் நள்ளிரவு 12 மணிக்கு அனைவருமே படம் பார்த்த உற்சாகத்தில்இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+