உரிமைகளைப் பெற சாதிய அமைப்புக்கள் தேவை
ஈரோடு:
உரிமைகளைப் போராடி பெற சாதி ரீதியான வலுவான அமைப்புகள் தேவை என கொங்கு வேளாளக் கவுண்டர்பேரவையின் தலைவர் தேவராஜன் தெரிவித்தார்.
ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில் தேவராஜன் கலந்து கொண்டுபேசியதாவது:
அரசியில் அங்கீகாரம் பெறவே கொங்கு மக்கள் கட்சியைத் துவக்கியுள்ளோம். முன்பு சாதி ரீதியான அமைப்புஇருந்ததால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது போன்றுவலுவான சாதி ரீதியான அமைப்புகள் இருந்தால் மட்டுமே கோரிக்கைகளைப் போராடிப் பெற முடியும். எதையும்வெல்ல முடியும்.
ஆனால், இப்போதுள்ள அரசியல் கட்சிகள் சாதியை அறவே ஒதுக்கும் சூழ்நிலை உருவாக்கி வருகின்றனர்.
பதவிக்காக நாங்கள் கொங்கு மக்கள் கட்சியைத் துவக்க வில்லை. இனத்தின் நலனுக்காக மட்டுமேதுவங்கியுள்ளோம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் இனம், விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டுள்ளது.இவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கிடைக்கவில்லை. இந்த பொருட்களுக்குஇவர்களே விலை நிர்ணயம் செய்யும் காலம் விரைவில் வரும்.
தற்போதுள்ள தனித் தொகுதிகளை மாற்றி அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும்என்றார்.
இந்தக் கூட்டத்தில், செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் சுத்தானந்தன், யதாவ சபை கோபாலகிருஷ்ணன்,தேவர் பேரவை ராமகிருஷ்ணன், தாயக மக்கள் கட்சித் தலைவர் ஜெயபால், பிள்ளைமார் பேரவை நிறுவனர்சரவணப் பொருமாள், வெள்ளாளஞ் செட்டியார் பேரவைத் தலைவர் முருகேசன், ரெட்டியார் சங்கத் தலைவர்ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications