கரை திரும்பினர் காணாமல் போன மீனவர்கள்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
ராமேசுவரத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்பவில்லை. எனவே அவர்களை தேடி மேலும் 2 விசைப் படகுகளில்மீனவர்கள் சிலர் சென்றனர்.
ஆனால் அவர்களைத் தேடச் சென்ற மீனவர்களும் காணாமல் போயினர். பின்னர் அவர்களை இலங்கைக் கடற்படை சிறை பிடித்து வைத்திருப்பதாகவும்,அவர்களை மீட்க கோரியும் மீனவர் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சிறைபிடிக்கப்பட்டு இருந்த 16 மீனவர்களும் ராமேசுவரம் திரும்பினர்.
மீன்பிடிக்கச் சென்று பிடிபட்ட 2 படகுகளின் டிரைவர்கள் கணேசன், ரோங்லிஸ் ஆகியோர் கூறுகையில், நாங்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதுஇலங்கை கடற்படை ரோந்துப் படகு எங்கள் அருகே வந்தார்கள்.
எங்கள் படகை நிறுத்தி அவர்கள் சோதனை நடத்தினார்கள். பின்னர் நாங்கள் தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு நின்ற கப்பலில்இருந்த கடற்படை அதிகாரிகள் எங்களை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
பின்னர் மீன்பிடித்துக் கொடுங்கள் என்று எங்களை மிரட்டினார்கள். நாங்கள் 200 கிலோ எடையுள்ள இறால் மற்றும் பிற மீன்களைப் பிடித்துக்கொடுத்தோம். அப்போது எங்களைத் தேடி இரண்டு படகுகள் வந்தன. அந்தப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்து வைத்தனர். பின்னர் எங்களைவிடுவித்தனர் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications