கூலிங்கிளாஸ் அணிந்த குறுந்தொகையே!
ஊராளும்
உத்தமனே!
உன் பெயர் சொல்லி - தன்
உச்சந்தலையில் - தினம்
பூசாத்தி மகிழும் - பெண்ணரசி
ராசாத்தி துணைவா- இரு
நங்கையர் திலகங்களுக்கும்- நீ
நெடுங்காலம் துணை வா!
அமைதிப்பூங்கா
சிம்மாசனத்திலும்: தமிழ்ச்சனத்தின் தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்...
கொலுவமர்ந்து - செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?
வேலையில் மூழ்கிவிட்டால் - உன்
விழிகள் தூங்கா:
நாட்டவர் நலத்தை - உன்
நினைப்புக்கள் நீங்கா: உன்
கோட்டை மேசையில்
கோப்புக்கள் தேங்கா: உன்னால்
ஆனதய்யா- தமிழ் பூமி
அமைதிப் பூங்கா!
நீ
ஏ.எம். முதல்
பி.எம். வரை
சலிக்காது உழைக்கும்
சி.எம்.
நீ தேசுமிகு - தமிழ்த்
தேயம் - தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!
முத்தமிழ் வித்தகமே! கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை:
உன்னை- இனி
வெல்லுமோ புடவை?
நிச்சயம்
நாளைய தேர்தல் - இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா! நீயேதான்
அடுத்த முதல்வன் அஞ்சுகம் மைந்தா!
விந்தையே
தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே! மாநகரத்
தந்தையின் தந்தையே!
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே: இனி
உழவர் பெருமக்கள்-
உடுத்த மாட்டார்கள் கந்தையே!
உன்னால்தான் உண்டானது
உழவர் சந்தையே: இனி
உழவர் பெருமக்கள் -
உடுத்த மாட்டார் கந்தையே!
சதா சர்வகாலமும்
மக்கள் பக்கம்தான்
மன்னா! உன் சிந்தையே:
என்ன செய்யும்?
வசவாளர் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
சதா சர்வகாலமும்
மக்கள் பக்கம்தான்
மன்னா! உன் சிந்தையே:
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
சிலர்
வாய்ப்புளிக்கச் சொல்லுவார்
வந்தபின் பார்ப்போம்! என்று
வள்ளலே ! நீதான் சொன்னாய்
வருமுன் காப்போம் என்று!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications