கூலிங்கிளாஸ் அணிந்த குறுந்தொகையே!
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்- நீ கட்டிய
சமத்துவபுரங்கள்: அவை
வன்பகை தீர மன்பதைக்கு - நீ
வழங்கிய வரங்கள்!
இனி
இங்கு...
கூன் பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்:
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
ஏசுதேவனும்
வாசுதேவனும் கூடுவர்: இதுகாறும்
டூ விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
நாடாளும்
நல்லவனே!
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொறை:
இது சாதாரணமல்ல
இமயப்பொறை!
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ:
அன்பின் வழியது உயிர்நிலை! என
அய்யன் வள்ளுவன் -
செப்பிய ஞானம்
செறிந்தவன் நீ!
மாண்பு மிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே!
அக்காமகன் என்ற அளவிலா
அன்பு காட்டினாய்? நீயே பெற்ற பக்கா மகன் என்ற அல்லவோ
பாசம் ஊட்டினாய்!
தாயானாய்
அந்நாளில்- உன்னை
அனேகம் பேர் அழைப்பர் - உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
முக...முக.. என்று:
பிறகுதான் - எனக்குப்
புரிந்தது- நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!
இனிய தலைவனே ! நீ
இன விடுதலைக்காக...
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்:
அண்ணாவின் நாமத்தை - உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா! நீ...
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்: அந்த
மன்னனுக்குப் பின்
மன்னனானாய்!
உன்னைப்பற்றி - நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்...
நீ தாடியில்லாத பெரியார்:
பொடியில்லாத அண்ணா: அவ்
இருவரும் உன் வடிவில்
இருக்கின்றனர் ஒண்ணா!
நீ வாலறிவன்: உன்னில்தான்
காலறிவன்!
என்னும் - என்
எழுத்துக்களை ஏற்று
நன்று! நன்று!
எனக் களித்தாய்: இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!
பெரியவனே! நீயெனப் பெரும்புகழ் என்னும்...
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்: நான்
வாழ்நாளெல்லாம் - நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications