செங்கோட்டை தாக்குதல்: மும்பையில் பாதுகாப்பு தீவிரம்
மும்பை:
டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மும்பையில் போலீஸ் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம்களை லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள குறி வைத்துத் தாக்குதல் நடத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
பாதுகாப்புக்கள் குறித்து மும்பை இணைப் போலீஸ் கமிஷனர் சிவானந்தா கூறுகையில், டெல்லி சம்பவம் மிகவும் பீதியை ஏற்படுத்தியுள்ளதால் இந்தியாவின்முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காதவண்ணம்போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் தீவிரவாதிகளால் ஆபத்து எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் ராணுவ தலைமையகத்தில் தாக்குதல் நடத்தியதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால்மும்பையிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது என்றார்.
கடலோரக் காவல் படை போலீஸ் டைரக்டர் ஜெனரல் பாலேரி கூறுகையில், டெல்லியில் செங்கோட்டை மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மும்பைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் இடைவிடாமல் முக்கிய இடங்களில் கண்காணித்து வருகின்றனர்.
கடலோரக் காவல் படை போலீஸார் உஷார்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் தீவிரவாதிகள் நுழையாதவாறு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பதட்டம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில ரிசர்வ் போலீஸ் படையினரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே தலைமையகம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், பங்கு சந்தை அலுவலகம்மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை மந்த்ராலயா ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, தானே மாவட்டத்தில் நவம்பர் 23 ம் தேதி லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்தலைமையகத்தைத் தகர்க்கத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதுதவிர அவர்கள் சிவசேனைத் தலைவர்பால்தாக்கரேயின் வீடான மடோஸ்ரீயைத் தாக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications