இந்துக்களுக்கு தனிவாரியம் தேவை: ராம.கோபாலன்
திருப்பூர்:
இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கோரிக்க விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் திருப்பூர் இந்து முன்னனியின் சார்பில் அரசின் பிடியில் ஆலயங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருப்பூர் டவுன் ஹால் கலையரங்கத்தில்நடைபெற்றது.
கருத்தரங்கில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் பேசியதாவது:
குருவாயூர், திருப்பதியில் பக்தர்கள் நல்ல தரிசனம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் அந்த வசதியில்லை. காரணம் அந்த கோவில்களில் வரும் வருமானத்தை அந்தநாட்டு மக்களுக்கே செலவு செய்கிறார்கள். திருப்பதியில் அந்த நாட்டு தலமைச்சர் கால்நடையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
மசூதி மற்றும் சர்ச்சுகளின் சொத்துக்களுக்கு நிர்வாகிகள் இருப்பது போல் இந்துக்களுக்கும் இருக்க வேண்டும். இதற்கென்று தனிவாரியம் அமைத்து,முன்னாள் ஓய்வு பெற்ற தர்ம கர்த்தாக்களை நியமிக்க வேண்டும்.
கிராம பூசாரிகள் 1146 பேருக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளதாக சொன்னார்கள். இரண்டு லட்சம் பூசாரிகள் உள்ளனர். அனைவருக்கும் ஓய்வூதியம்கொடுக்க வேண்டும், கருணை இல்லங்களுக்கு கோவில்களில் இருந்து பணத்தை தரக் கூடாது.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்களை வெளியிட மறுக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ராஜாஜி எழுதிய ராமாயணம்,மகாபாரதத்தை ஒரு ரூபாய்க்கு விற்றார்கள். எனவே இந்த புத்தகங்களை வெளியிட வேண்டும்.
356 தாழ்த்தப்பட்டவர்களின் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்கள். நான்கு லட்சம் அரிஜன கோயில்களில் உள்ளது. இந்தகோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பணம் தர வேண்டும். இந்து கோவில்களுக்கு குத்தகைதாரர் சட்டத்தில் இருந்து கோயில்களுக்கு விதி விலக்குஅளிக்க வேண்டும்.
குத்தகை வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாச்சாரியார்களுக்கும், பூசாரிகளுக்கும் சம்பளம் சம்பளம் கொடுக்கவேண்டும். கோவில் என்பது சமுதாயத்தின் சொத்து. சதாயத்தின் உயிர்நாடி. அதை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது.
ராமேஸ்வரத்திற்கும், மதுரைக்கும் அகல ரயில் பாதை விட வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சாமி சிலைகளை உடைத்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றார்ராமகோபாலன்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications