அ.தி.மு.க.வில் பா.ம.க சேரும்...ஏ.சி.சண்முகம்
கோவை:
அ.தி.மு.க அணியில் சேர பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது என கோவையில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்து வரும் சட்டசபைப் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணி அமையும். புதிய நீதிக்கட்சி 80 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. வலுவானகட்சிகளைச் சேர்த்துக் கூட்டணி அமைக்க புதிய நீதிக்கட்சி முடிவு செய்துள்ளது.
தி.மு.க, மற்றும் அ.தி.மு.க கட்சிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளைப் போல் கொடுக்கும் இடங்களைப் பெற்று போட்டியிட மாட்டோம். எங்களதுகட்சிக்கென தனி செல்வாக்கு உண்டு.
வட மாவட்டங்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வால் கூட தனித்து போட்டியிட முடியாது.
வாழப்பாடி இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவேஅ.தி.மு.க அணியில் சேர முடிவு செய்து விட்டது. இந்த அணிக்குப் போக ஜெயலலிதாவுடன், ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனவே,வாழப்பாடி இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
ராமதாஸ் இருக்கும் அணியில், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்காது என்றார் சண்முகம்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications