தாராபுரம் சாமிசிலை உடைப்பு... 2 பேர் கைது
தாராபுரம்:
தாராபுரம் அருகே நடந்த சிலை உடைப்புச் சம்பவத்தில் இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தாராபுரத்தில் செவ்வாய்கிழமை இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு நடந்தது.
ஈரோடு மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அண்ணாநகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. மேலும்விநாயகருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாராபுரத்தில் பதட்ட நிலை உருவானது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பாரூக் என்ற மன்னர் பாரூக் (34), சுப்ரமணியசுவாமி தெருவைச் சேர்ந்தஜாபர் அலி (29), ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சத்தியமங்கலத்தில் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தின்படி நாங்கள்பழி வாங்க வேண்டும் என நினைத்தோம். இதன்படி தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைக்கத் திட்டமிட்டோம்என வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தாராபுரத்தில் செவ்வாய்கிழமை கடையடைப்பு நடந்தது. இந்த கடையடைப்பின் போதுஅசம்பாவிதம் ஏதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் சத்தியமங்கல சம்பவத்தில் இந்து முன்னணியினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்அடைக்கப்பட்டது போல, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. உண்மையான குற்றவாளிகளை உடனடியாககைது செய்ய வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications