தாமரைக்கனி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
சென்னை மருத்துவமனையில் எம்.எல்.ஏ. தாமரைக்கனி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தாமரைக்கனி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான தாமரைக்கனியின் பெயர் சமீபத்தில் மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் அடிபட்டது.
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை தாக்கியது தொடர்பாக தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு சபாநாயகர் பழனிவேல்ராஜன்பதினைந்து நாள் சிறைத்தண்டனை விதித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை உடனே விடுவிக்க உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்தத்தீர்ப்பில், தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு பதினைந்து நாள் சிறைத்தண்டனை விதித்தது செல்லும் என்று கூறப்பட்டது.
எனவே தாமரைக்கனி எம்.எல்.ஏ மீண்டும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் தாமரைக்கனி எம்.எல்.ஏ சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீறுநீரக கோளாறு காரணமாக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கைது செய்யும் நடவடிக்கை தாமதமாகும் என்று தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications