வரதட்சணை கேட்டு குழந்தையைப் பறித்த கணவன்
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருத்தலையூர் கிராமத்தில் வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தி, தன் குழந்தைகளை தர மறுத்துச் சென்ற கணவரைப்போலீஸார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜாவுக்கும் (26), தங்கையன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிரியதர்ஷினிஎன்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சரோஜாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.
இதையடுத்து தனக்கு ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை வேண்டும். இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என்று கூறி தங்கையன் தனது மனைவிசரோஜாவைக் கொடுமைப்படுத்தினார். இதனால் அடிக்கடி கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து தங்கையன் தனது இரண்டு கைக்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது சகோதரி வீட்டுக்குச் சென்று விட்டார். சரோஜாவிடம் எந்தத்தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் குழந்தைகளைக் கொடுக்கவும் இல்லை. ரூ 1 லட்சம் வரதட்சணை கொடுத்தால்தான் குழந்தைகளைத்தருவேன் என்று கூறி விட்டார்.
இது தொடர்பாக சரோஜா போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் இதில் தலையிட்டு குழந்தைகளை தங்கையனிடமிருந்து வாங்கி சரோஜாவிடம்கொடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications