கவர்னர், முதல்வர் ரம்ஜான் வாழ்த்து
சென்னை:
வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுப்படுவதைத் தொடர்ந்து தமிழக கவர்னர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா ஆகியோர் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் தனது வாழ்த்துச் செய்தியில், இந்த ரம்ஜான் பெருவிழா கொண்டாடும் அனைவரும் சகோதரத்துவத்துடனும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கவேண்டும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் ரம்ஜான் பண்டிகையை அடுத்து முஸ்லீம் பெருமக்கள் பல நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் தினத்துடன் தங்கள் விரதத்தைமுடித்துக் கொள்கிறார்கள். இந்த நன்னாளில் அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அனைத்து மக்களும் தீவிரவாதத்தைக் கைவிட்டு சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜாதி, மத பேதமின்றி அனைத்துமக்களும் வாழ வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்ஆகியோர் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
