கோவையில் ஹெல்த் எக்ஸ்போ கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் உடல்நலம் குறித்த ஹெல்த் எக்ஸ்போ 2000 கண்காட்சி வியாழக்கிழமை துவங்குகிறது. இந்த கண்காட்சிக்கு கோயம்புத்தூர் நீரிழிவுநோய்க் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

கோவையில் வியாழக்கிழமை ஹெல்த் எக்ஸ்போ 2000 கண்காட்சி ரத்னா ரிஜென்சி ஓட்டலில் நடக்கிறது. கண்காட்சி குறித்து டாக்டர் சேகர்கூறியதாவது:

உடல்நலம், உடலில் ஏற்படும் நோய், தேவையான சிகிச்சை, புதிய மருந்துகளின் வரவு, நவீன மருத்துவ முறைகள் குறித்து இலவச ஆலோசனைகள்வழங்கப்படும். இதில், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்பங்கேற்கின்றன. கண்காட்சியில், 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு, இருதயம், சிறுநீரகம், கண்பார்வை உட்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனையும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

உடல் எடையை குறைக்கும் ஓர்லிஸ்டேட் என்ற மருந்து கண்காட்சியில் இடம் பெறுகிறது. முதல் முறையாக இந்த மருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது.

முன்பு பஞ்சத்தால், அதிகமான மக்கள் இறந்தனர். ஆனால், இப்போது அதிகமாக உணவை உண்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிஇறக்கின்றனர். எனவே, உணவுப் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+