ஸ்ரீகாந்த் நிறுவனத்தை வாங்குகிறது பென்டாமீடியா
சென்னை:
மீடியா ட்ரீம்ஸ் லிமிடெட், மாயாஜால் தீம் பார்க், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்த்தின்ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டைன்மென்ட் நிறுவனங்களை ரூ. 175.96 கோடிக்கு,சென்னை பென்டாமீடியா கிராஃபிக்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்குகிறது.
பென்டாமீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் டிசம்பர் மாதம்22-ம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த நிறுவனங்களை வாங்குவதற்கு ஒப்புதல்அளிக்கப்பட்டது.
இது குறித்து பத்திரிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருப்பதாவது:
பென்டாமீடியாவின் இந்த முடிவு "ஸ்டாக் ஸ்வாப் முறைப்படி எடுக்கப்பட்டிருக்கிறது.இதில் பென்டாமீடியாவின் பங்குகள் 8.8 சதவிகிதம் இருக்கும், எஸ்பிஐ கேபிடல்மார்க்கெட் இந்த நிறுவனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படிகேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்தே நிறுவனங்களை விலைக்கு வாங்கமுடிவு செய்யப்பட்டது.
நிறுவனங்கைள வாங்குவதற்காக பென்டாமீடியாவின் 35.19 லட்சம் மதிப்புள்ளபங்குகள், ஒரு பங்கு ரூ 500 என்ற விலைக்கு விற்கப்பட இருக்கிறது.
மீடியாட்ரீம்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 3 வருடங்கள் ஆகிறது. இந்த நிறுவனம்தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஈடுபட்டு வந்தது.இந்த நிறுவனம் பல செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனங்களில் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் பல பிராந்திய மொழி நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.சமீபத்தில் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி படத்தையும் இந்தநிறுவனம்தான் தயாரித்தது.
ஸ்ரீகாந்த் நிறுவனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்ரீகாந்த்தால்நடத்தப்பட்டு வந்தது. இவர் பென்டாமீடியாவால் நடத்தப்படும் நம் டிவி என்றநிறுவனத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே இவரது நிறுவனம் பென்டாமீடியாவால் வாங்கப்படுகிறது.
மாயாஜால், சென்னையின் புறநகர் பகுதிகளில் விரைவில் வரவுள்ள தீம் பார்க். இதுவேல்ஸ் ஓட்டலால் நடத்தப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications