ரம்ஜான்: ஜனாதிபதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லீம் மக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் துணை ஜனாதிபதிகிருஷ்ண காந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஈத்முபாரக் வாழ்த்துக்கள். இந்த நாள் இந்தியாவிற்கு முக்கியமான நாள். இந்தியாவின் கலாசார ஒற்றுமையைவெளிப்படுத்தும் நன்னாள்.
புனித ரம்ஜான் மாதத்தின் சிறப்பையும், நோண்பின் முடிவையும் உணர்த்தும் நாள் இது. உலகில் இரக்கம், அன்பு,தானம் ஆகியவற்றை வலியுறுத்தும் நாள் இது என்று அவர் கூறியிருந்தார்.
கிருஷ்ண காந்த்தும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications